கனடா விமானத்தில் வாந்தி : மன்னிப்பு கோரிய நிறுவனம்
#Canada
#Lanka4
#லங்கா4
#Vomit
Mugunthan Mugunthan
1 year ago

கனடாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான எயார் கனடா நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
விமானம் ஒன்றில் இருக்கைகளில் வாந்தி காணப்பட்டதாகவும் இவை உரிய முறையில் சுத்தம் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் முதல் மொன்றியால் வரையில் பயணத்தை மேற்கொண்ட விமானம் ஒன்றில் இவ்வாறு பயணிகள் இருக்கைகள் அசுத்தமாக காணப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி இந்த விவகாரம் தொடர்பில் பயணி ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை இட்டிருந்தார்.
அசௌகரிகங்களை எதிர்நோக்கிய அனைத்து பயணிகளிடமும் மன்னிப்பு கோருவதாகவும், இந்த விடயம் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனவும் எயார் கனடா நிறுவனம் தெரிவித்துள்ளது.



