கனடாவின் காட்டுத்தீயினை அடுத்து மக்களை மீள வீடு திரும்ப அறிவுறுத்தல்

#Canada #Home #Lanka4 #காடு #fire #லங்கா4 #Forest #Canada Tamil News #Tamil News
கனடாவின் காட்டுத்தீயினை அடுத்து மக்களை மீள வீடு திரும்ப அறிவுறுத்தல்

காட்டுத்தீ காரணமாக வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான கனேடியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் ஆறுதலடைந்துள்ளார்கள்.

 20,000க்கும் அதிகமானோர் வெளியேற்றம் கனடாவில் காட்டுத்தீயால் கடுமையாக பாதிக்கப்பட்ட Yellowknife பகுதியிலிருந்து, 20,000க்கும் மேலான மக்கள் ஆகஸ்து மாதத்தின் மத்தியில் வெளியேற்றப்பட்டார்கள்.

 இந்நிலையில், தீயணைப்பு வீரர்கள் காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்ததைத் தொடர்ந்து, வெளியேற்ற உத்தரவு நேற்று மதியம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

images/content-image/1694099704.jpg

 எப்போது வீட்டுக்குத் திரும்புவோம் என ஆவலுடன் காத்திருந்தவர்களுக்கு இந்த செய்தி பெரிய ஆறுதலை அளித்துள்ளது. மக்களுக்கு வரவேற்பு நகரத்துக்கு வரும் விமானங்கள் மீண்டும் இயங்கத்தொடங்கவுள்ள நிலையில், ’Welcome Home’ என்னும் பதாகை மீண்டும் தங்கள் வீடுகளுக்கு வரும் மக்களை வரவேற்கும் வகையில் Behchoko பகுதிக்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.

 காட்டுத்தீக்குப் பின் நகரம் சற்று வித்தியாசமாகத்தான் உள்ளது என வீடுகளுக்குத் திரும்பும் மக்களுக்குத் தெரிவிக்கும் நகர மேயரான Rebecca Alty, காட்டுத்தீயிலிருந்து நகரத்தை பாதுகாக்கும் வகையில் பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 ஆனாலும், கடைகள், நகர சேவைகள் ஆகியவை மீண்டும் இயங்கத்தொடங்குவதற்கு சற்று தாமதமாகும் என்பதையும் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார் அவர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!