நடிகர், இயக்குநர் மாரிமுத்து மரணம்

#India #Cinema #Death #Actor #TamilCinema #Director #2023 #Heart Attack
Mani
2 years ago
நடிகர், இயக்குநர் மாரிமுத்து மரணம்

பிரபல இயக்குநரும், ‘ஜெயிலர்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகருமான மாரிமுத்து இன்று காலை, இன்று காலை ‘எதிர் நீச்சல்’ சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென மயங்கி கீழே விழுந்த நிலையில், உடனடியாக அருகில் இருந்த சூர்யா மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர்.

நடிகர் மாரிமுத்துவை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக உறுதி செய்துள்ளனர். நடிகர், இயக்குநர் மாரிமுத்துவின் திடீர் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

நடிகர் மாரிமுத்துவின் உடல், திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக இன்று மாலை வரை வைக்கப்பட்டு, பின்னர் சொந்த ஊரான மதுரை தேனி வருசநாட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை முகலிவாக்கத்தில் அவர் புதிதாக வீடு கட்டி வருவதாகவும், அதனால் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த நடிகர் மாரிமுத்து, கடந்த சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4