இந்தியாவில் 71 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு

#India #Corona Virus #Covid 19 #Covid Variant #Tamil People #people #2023 #Vaccine
Mani
1 year ago
இந்தியாவில் 71 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு

நாட்டில் நேற்று முன்தினம் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று 71 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 97 ஆயிரத்து 537 ஆக உயர்ந்தது.

24 மணி நேரத்தில் தொற்றில் இருந்து 68 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 65 ஆயிரத்து 19 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளதால், சிகிச்சை பெற்று வரும் மொத்த எண்ணிக்கை 494 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் ஒருவர் பலியான நிலையில், நேற்று உயிரிழப்பு இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 32 ஆயிரத்து 24 ஆக நீடிக்கிறது.