உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்திற்கு அடுத்ததாக கனடா!

#Canada #Country #Lanka4 #லங்கா4 #World #Canada Tamil News #Tamil News
உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்திற்கு அடுத்ததாக கனடா!

உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது கனடா.

 U.S. News & World Report என்னும் அமெரிக்க ஊடக நிறுவனம் ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த பட்டியலில், கடந்த ஆண்டு மூன்றாவது இடத்திலிருந்த கனடா, இந்த ஆண்டு இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

 மொத்தத்தில், வாழ தலைசிறந்த நாடாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதுடன் புதிதாக ஒரு தொழில் துவங்குவதற்கு சிறந்த நாடுகள் என்னும் பிரிவிலும் கனடா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

  •  கல்விக்கு, கனடாவுக்குக் கிடைத்துள்ளது நான்காவது இடம்.

  •  வெளிநாட்டவர்கள் கல்வி சிறந்த நாடுகள் பட்டியலில் 7ஆவது இடம்.

  •  பிள்ளைகளை வளர்ப்பதற்கு ஏற்ற நாடுகள் பிரிவில் 7ஆவது இடம்.

  •  இன சமத்துவத்துக்கு 2ஆவது இடம்.

  •  பெண்களுக்கு ஏற்ற நாடுகள் பிரிவில் 6ஆவது இடம்.

  •  பணி ஓய்வு பெற்றபின் வாழ்வதற்கு ஏற்ற நாடுகள் என்னும் பிரிவில் 6ஆவது இடம்.

  •  ஒளிவுமறைவில்லாத நாடுகள் என்னும் பிரிவில் 6ஆவது இடம்.

 இப்படி பல பிரிவுகளில் சிறந்த இடங்களைப் பிடித்து, உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது கனடா.

 பட்டியலில் முதலிடத்தில் இருப்பது, சுவிட்சர்லாந்து. சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, தொடர்ந்து இரண்டாவது முறையாக அந்நாட்டுக்கு இந்த சிறப்பு கிடைத்துள்ளது. ஆம், கடந்த ஆண்டும், அதாவது, 2022ஆம் ஆண்டின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடித்ததும் சுவிட்சர்லாந்துதான்!

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4