நாளை தீபாவளித் திருநாள் - வழிபாட்டு நேரங்கள் மற்றும் முக்கிய சம்பிரதாயங்கள் வெளியீடு!

#Festival #LANKA4 #celebration #Public #DIwali
Mithra
35 minutes ago
நாளை தீபாவளித் திருநாள் - வழிபாட்டு நேரங்கள் மற்றும் முக்கிய சம்பிரதாயங்கள் வெளியீடு!

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி, இருளை நீக்கி ஒளியை ஏற்றுவதுடன், தீமையை அழித்து நன்மை வெற்றிபெறுவதையும் எடுத்துரைக்கும் உன்னதத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து, இறைவனை வழிபட்டு, பெரியோரின் ஆசிகளைப் பெற்று தீபாவளியைக் கொண்டாடுவது இந்துக்களின் பாரம்பரிய வழக்கமாகும்.

தீபாவளியின் பின்னணியில் பல்வேறு ஆன்மீகக் கதைகள் காணப்படுகின்றன. அவற்றில் நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்து மக்களைத் துன்பத்திலிருந்து விடுவித்த நிகழ்வு முக்கியத்துவம் பெறுகின்றது.

தீபாவளி என்பது வெளிப்புற இருளை அகற்றும் திருநாள் மட்டுமல்லாது, மனித மனங்களில் குடிகொண்டிருக்கும் கோபம், பொறாமை, அகங்காரம், வெறுப்பு போன்ற தீய எண்ணங்களை அகற்றி அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகின்றது.

இதேவேளை, தீபாவளி தினத்தில் எண்ணெய் குளியல், இறைவழிபாடு மற்றும் லட்சுமி குபேர பூஜை ஆகியவை சிறப்புப் பெறுகின்றன.

இப்பூஜையின் மூலம் செல்வ வளமும் குடும்ப நலனும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

அதன்படி, இந்த ஆண்டு நவம்பர் 8ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு அமாவாசை திதி ஆரம்பமாகி, நவம்பர் 9ஆம் திகதி நண்பகல் 12.46 மணியுடன் நிறைவடைகின்றது.

இதற்கமைய, நவம்பர் 8ஆம் திகதி மாலை லட்சுமி குபேர பூஜையை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி தினத்திற்கான முக்கிய வழிபாட்டு நேரங்கள்:

  • கங்கா ஸ்நானம்: அதிகாலை 3.30 – 5.30
  • தீபாவளி பூஜை: காலை 7.45 – 8.45
  • சதுர்த்தசி விரதம்: முற்பகல் 10.30 – 11.30
  • கேதார கௌரி விரதம்: பிற்பகல் 3.15 – 4.15
  • லட்சுமி குபேர பூஜை: மாலை 6.00 – 8.00

பஞ்சாங்கத்தின்படி முக்கிய நேரங்கள்:

  • காலை நல்ல நேரம்: 7.45 – 8.45
  • மாலை நல்ல நேரம்: 3.15 – 4.15
  • ராகு காலம்: மாலை 4.30 – 6.00
  • எமகண்டம்: நண்பகல் 12.00 – 1.30
  • குளிகை: பிற்பகல் 3.00 – 4.30

இவ்வாறு தீபாவளி வழிபாடுகளுக்கான நேரங்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், மக்கள் புத்தாடைகள் அணிந்து, இல்லங்களை அலங்கரித்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாகத் தீபாவளியைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.

இந்த ஒளித் திருநாள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு மற்றும் நல்வாழ்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!