பிரான்ஸில் அகதிகள் குடியேற்றம் அதிகரித்துள்ளது
கடந்த ஐம்பது ஆண்டுகளில் பிரான்சில் குடியேறியுள்ள அகதிகளின் எண்ணிக்கைஇரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
அகதிகள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு ஆய்வு ஒன்றில் 64% சதவீதமானமக்கள் (பத்தில் ஆறுபேருக்கும் அதிகமானவர்கள்) இந்த அதிகப்படியானஅகதிகள் குடியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
1968 ஆம் ஆண்டுகணக்கெடுக்கப்பட்டதன் படி பிரான்சில் 6.5% சதவீதமானவர்கள் அகதிகளாகஇருந்தனர். 2021 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 10.3% சதவீதமாகஅதிகரித்துள்ளது. இந்த அகதிகளில் 48.2% சதவீதமானவர்கள் ஆப்பிரிக்க நாடுகளைச்சேர்ந்தவர்கள் எனவும், 32.3 % சதவீதமானவர்கள் ஐரோப்பிய நாடுகளைச்சேர்ந்தவர்கள் எனவும், மீதமானவர்களே ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகள் குடியேற்ற விடயத்தில் அரசு மேலும் இறுக்கமாக செயற்படவேண்டும் எனவும், அகதிகள் குடியேற்றத்தை அரசு நிறுத்த வேண்டும் எனவும் 64% சதவீதமானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, அகதிகள் குடியேற்ற விடயத்தில் மாற்றங்கள் எதையும்செய்யத்தேவையில்லை என 36% சதவீதமான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
*இந்த கருத்துக்கணிப்பில் 18 வயதுக்கு மேற்பட்ட 1,017 பேர் கலந்து கொண்டிருந்தனர். செப்டம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில்
இணையமூடாக இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.