கனடாவில் வாகன திருட்டுக்களில் ஈடுபட்ட கும்பல் கைது

கனடாவில் 22 வாகனங்களை களவாடிய குற்றச்சாட்டின் பேரில் ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுமார் இரண்டு மில்லியன் டாலர்கள் பெறுமதியான வாகனங்களை குறித்து கும்பல் களவாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பீல் பிராந்திய போலீசார் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரேஞ்ச் ரோவர் ரக வாகனம் ஒன்று பிராம்டன் பகுதியில் களவாடப்பட்டதனை தொடர்ந்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
திட்டமிட்ட அடிப்படையில் இந்த கும்பல் வாகனங்களை களவாடியுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 27 வயதான ராபர்ட் ராம் நாரின், 32 வயதான கஜன் கருணாநிதி, 23 வயதான ரியாஸ் முகமத், 29 வயதான வேன் ஜார்ஜ் சஞ்சய், 25 வயதான ஆப்ஸீகன் சிவசேகரன் மற்றும் 36 வயதான ஒனில் ரிக்கெட்ஸ் ஆகிய சந்தேக நபர்களை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்களில் சிலர் வெறும் குற்ற செயல்களுடன் தொடர்புடைய நபர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களுக்கு எதிராக மொத்தமாக 42 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



