பிரான்ஸ் மதுபானக் கடைத் தாக்குதலில் இராணுவ வீரர் கொல்லப்பட்டார்
#France
#Attack
#Lanka4
#liquor
#தாக்குதல்
#லங்கா4
#shop
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago
மதுபான விடுதி ஒன்றில் இடம்பெற்ற மோதலில் இராணுவ வீரர் ஒருவர்கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் எட்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Solliès-Pont (Var) நகரில் இச்சம்பவம் கடந்த ஓகஸ்ட் 27 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. அங்குள்ள இரவு நேர மதுபான விடுதி ஒன்றில் மது அருந்திக்கொண்டிருந்த இராணுவ வீரர் ஒருவக்கும் ஏனைய சிலருக்கும் இடையேவாக்குவாதம் எழுந்தது.
பின்னர் அது மோதலாக வெடித்தது. காலை 5 மணிஅளவில் இராணுவ வீரர் அவர்களால் தாக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இராணுவ வீரர், செப்டம்பர் 1 ஆம் திகதிசிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடற்கூறு பரிசோதனைகளில் இரத்தக்கசிவினால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து, மேற்படி தாக்குதலில் ஈடுபட்ட எட்டுபேரினை செப்டம்பர் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் காவல்துறையினர் கைது செய்தனர்.