கனடாவில் வேலைவாய்ப்பு நிலவரம் ஸ்திர நிலையில்
#Canada
#Job Vacancy
#Lanka4
#தொழில்
#லங்கா4
#Canada Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago

கனடாவின் வேலை வாய்ப்பு நிலவரம் ஸ்திரமான நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் வேலையற்றோர் எண்ணிக்கை 5.5 வீதமாக பதிவாகியுள்ளது.
ஆகஸ்ட் மாதம் பொருளாதாரத்திற்கு 40000 புதிய தொழில் வாய்ப்புக்கள் சேர்க்கப்பட்டுள்ளது. நாட்டின் சனத்தொகை அதிகரிப்பு வீதத்திற்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு மாதமும் வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப சேவைகள், கட்டுமான சேவைகள் போன்றவற்றில் தொழில் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. இதேவேளை, கல்வி மற்றும் உற்பத்திதுறைகளில் தொழில் வாய்ப்புக்கள் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மணித்தியால சம்பளங்கள் தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்லும் போக்கினை பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



