இங்கிலாந்து சிறையில் இருந்து தப்பிய இராணுவ வீரர்!
இங்கிலாந்தில் சிறையில் இருந்து தப்பிய ராணுவ வீரரை, ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டனர்.
இங்கிலாந்தில் டேனியல் அபேட் கலீப் (வயது 21) என்பவர் இராணுவ வீரராக பணியாற்றிய நிலையில், எதிரி நாட்டுக்கு தேவைப்படும் இராணுவ தகவல்களை கசிய விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து ராணுவ இரகசிய சட்டங்களை மீறியதால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், பின்னர் அவரை கைது செய்து வாண்ட்ஸ்வொர்த்தில் உள்ள சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் முன்னாள் ராணுவ வீரரான டேனியல் சிறையில் இருந்து தப்பி ஓடினார். அவர் அங்குள்ள ரிச்மண்ட் பூங்காவில் தலைமறைவாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த பூங்கா சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் அளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. எனவே ஹெலிகாப்டர்கள் மூலம் இராணுவ வீரர்கள் அவரை தேடி வருகின்றனர். மேலும் பிரான்ஸ் நாட்டுக்கு தப்பி செல்லும் முக்கிய துறைமுகமான டோவரிலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.