இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் பொது மக்களுக்கு விசேட அறிவித்தல்

#SriLanka #Massage
Prathees
1 year ago
இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் பொது மக்களுக்கு விசேட அறிவித்தல்

கையடக்கத் தொலைபேசிகளில் பெறப்படும் போலியான குறுஞ்செய்திகள் ஊடாக தவறான விளம்பரங்கள் பரப்பப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர செயற்பாட்டு மன்றம் மக்களுக்கு அறிவித்துள்ளது. 

தபால் மூலம் பார்சல் கிடைத்துள்ளதாகவும் முகவரி சரியில்லை என்று பார்சல் திருப்பி அனுப்பப்படும் என்று உரிய குறுஞ்செய்திகள் மூலம் மக்களுக்குத் தெரிவிக்கப்படுவதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பணம் பெறுவதற்காக மக்களின் இரகசிய தகவல்களை பெற்று பண மோசடி செய்ய வாய்ப்புள்ளதால் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு தெரிவிக்கின்றார்.