திரு. நாதன் கந்தையாவின் “காலம்” நாவலின் அட்டைப் படம் சொல்லும் கதை.
நாதன் கந்தையா அவர்களின்
“காலம்” நாவலின்
அட்டைப் படம் சொல்லும் கதை.
போரும் முடிந்தும்
போர் முடிச்சு அவிழவில்லை.
பார் நின்று செய்த போரை
பார் முழுக்க பரந்த, பறந்த, பாவித் தமிழர்களால்
நிறுத்தவும் இயலாது போனது துரதிஸ்டம் மட்டுமல்ல
தூர பார்வையற்ற தூதுவர்களின்
கையால் ஆகாத தலைப்பே இல்லாத கவிதை.
அது இருக்க..
வென்றாடிப் போனோம்
வெல்வோம் என வீழ்ந்தோம்
தின்றாடி திமிர் கூடி சிலரால் ஆன புதைகுழிக்குள்
அகப்பட்டது மக்கள் மட்டுமல்ல
மானுடம் விரும்பும் மாண்புமிகு மானமுமே.
வென்றவன் யார்? தோற்றவன் யார்?
வேரோடு நின்றவன் யார்?
கண்டவன் யார்?
கடை கண் கண்டும் சென்றவன் யார்?
களித்தவன் யார்?
உடல்களை உண்டு கிழித்தவன் யார்?
மறித்தவன் யார்?
மடி மீது துடித்தவன் யார்?
பிடித்தவன் யார்?
பிடிக்காமல் முடித்தவன் யார்?
முடியாத ஒரு கதையை கேள்விக்குறியாக்கி
குறை பிரசவத்தில் கோதிய காயங்கள்.
உடமையை இழந்த சோகம் மட்டும்
உறவை கையுள் பிசைந்துஊரையும்,
உறங்கிய முற்றத்தையும் விட்டு
சுடுகாட்டுக்குள் காட்டும் வழி
பதாகை மட்டும் புரிகிறது.
வண்டிலும் மாடும்
கட்டிய பெண்டிலும் சேயும்.
நெளிந்த மூடியில்லா பானையும்
தேய்ந்த வண்டில் சக்ரமும்
அவன் மனதில் தேயாத நம்பிக்கையும்
மடியில் இரு எதிர்காலங்கள்
திசை தெரியா சூரியனாய்
பால்மணம் மாறா வாய்கள்
நீர் வற்றிய குளத்தில் வெடித்து பிளந்ததுபோல்
காய் ந் து காயத்தையும்
வேய்ந்து வட்டுக்குள் கூனிக் குறுகி வர முடியாமல்
எட்டிப் பார்க்கும் பாளையில் குரும்பைபோல.
நடக்க பலம் இல்லை.
தொடுக்க திசை எல்லை.
சலிக்காத மனதை சல்லடை போட்டு உடைக்கும்
சாத்தானின் பிள்ளைகளில் சன்னக் குமுறல்கள்.
எல்லாம் இழந்தோம்.
எல்லையையும் கட ந் தோம்.
சொல்கால்கூட ஒத்தணமிட ஒரு பட்சிகூட இல்லை.
பசியும் பாடையும் எமக்காக காத்துக் கிடக்குறது.
வாசல் இல்லாத வீட்டுக்குள்
வசியம் செய்யப்பட்ட நேரம் அது.
மூச்சு இருக்கும்வரை
காலனின் கைகாட்டல் தெரிகிறது.
காலனின் குகை வாசல் தெரியாது
அதற்குள் தொடர்ந்த எமது பயணம் அது.
இது அட்டைப் படம் அல்ல.
விட்டம் விட்டமாய் தூங்கி குதூகலித்த
தூக்கணாங்குருவிகளை துரத்திவிட்டு
நாகம் குடிகொள்ள போட்ட திட்டம்.
பாதை தொலைந்தாலும்
பார்வை தொலைக்காத பல இனங்கள்
உலகில் உயிர் பெற்று ஆழும் அறமாக நாம் காண்கிறோம்.
அடை காத்த கோழி இறந்தாலும்
மடை வெள்ளம் உடைத்தாலும்
உடை கொண்ட மானமாய் எழும் பார்வை மட்டும்
அணையாமல்
வினை வேய்ந்த
விசை தோய்ந்த
விடிகாலை கண்ணில் தெரிகிறது.
“விடம் ஒரு நாள்
விழுங்கும்.
வினை அதனை முணங்கும்.
மடம் ஒரு நாள் வணங்கும்.
மடம் பதித்தே அடங்கும்.
அடம் பிடித்த இனத்தை
விடம் அதனைக் கொண்டு
நடம் இடவே முடியா?
நாள் விரைவில் இல்லை.
கொடும் புயலின் பின்னே
குலை குலுங்கும் மரமாய்
தடம் அதுவும் துலங்கும்
தமிழ் அதனை அடையும்.
இ ந் த அட்டைப்படத்துக்கு மேலும் பல நாவல்த் தொடரே எழுதலாம்.
இவர் ஆற்றல் என்பது பரம்பரையாக வந்த காவல் ஆற்றல்.
அவராலேயே அவர் எழுதியவைகளையும். புனை ந் த நூற்றுக்கணக்கான கவிதைகளையும் நம்ப இயலாது.
மேலும் ஒரிரு ஒப்பனைக் கவிதைகளை பிரதி செய்துவிட்டு புனைப்பெயர்களும் பட்டங்களும் தாமே போடுக்கொள்ளும் காலத்தில் இவரின் படைப்பு என்பதை விட, தனது மன வலியை அசைபோட்டு மற்றவர்களுக்கு முன் மடைபோட்ட விதம் பாராட்டகூடியவையே.
SHELVA SWISS