கொவிட் தொற்றின் புதிய பிறழ்வு : பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

#Corona Virus #Lanka4 #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
கொவிட் தொற்றின் புதிய பிறழ்வு : பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

பிரித்தானியாவில் புதிய கோவிட் மாறுபாடு BA.2.86 வகை தொற்று வேகமாக  பரவுவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், தடுப்பூசி குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குளிர்காலத்தில் வைரஸ் தொற்று வேகமாக பரவும் என்பதால் உடனடியாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு அவசர அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி முதியோர் பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள், இந்த வாரம் முதல் கொவிட் மற்றும் ஃப்ளு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய சுகாதார சேவை கூறியது.

"தற்போது இனங்காணப்பட்டுள்ள  மற்ற கோவிட்-19 வகைகளுடன் ஒப்பிடும்போது, BA.2.86 வைரஸ் மரபணுவில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பிறழ்வுகளைக் கொண்டிருந்தாலும், பரவுதல், தீவிர தன்மையால்  ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!