பிரான்ஸில் iphone 12 விற்கப்படுவதிலிருந்து நீக்கம்

#France #Lanka4 #லங்கா4 #Mobile #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
பிரான்ஸில் iphone 12 விற்கப்படுவதிலிருந்து நீக்கம்

L'Agence nationale des fréquences பிரான்சில் விற்பனையில் இருந்த iPhone 12 தொலைபேசியை விற்பனை செய்வதற்கு தற்காலிகமாக நாடுமுழுவதும் நேற்றையதினம் (12/09) முதல் தடை செய்துள்ளது.

 குறித்த இந்த Apple சாதனம் வெளியிடும் மின்காந்த அலைகள் ஐரோப்பிய விதிமுறைகளால் அனுமதிக்கப்பட்ட வரம்புகளை விட அதிகமாக இருப்பதாக சோதனையில் தெரியவந்த நிலையிலேயே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 ஏற்கனவே விற்கப்பட்ட iPhone 12ல் உள்ள மின்காந்த அலைகளின் அளவை விரைவாக சரிசெய்ய அனைத்து வழிகளையும் செயல்படுத்த வேண்டும் என Apple நிறுவனத்திடம் ஆணையம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 இல்லையெனில் அவை திரும்பப் பெறப்பட வேண்டும் எனவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தொலைபேசிகளை அன்றாடம் பாவிக்கும் போது மனித உடலுக்கு மின்காந்த அலைகள் பரிமாறுகுறது, எனவேதான் ஒவ்வொரு தொலைபேசிகளும் எவ்வளவு மின்காந்த அலைகளை கொண்டிருக்க வேண்டும் என்னும் அளவுகோல் உண்டு. அதற்கு அதிகமாவது உடல் நலத்துகு பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!