குழந்தைகளுக்கு உகந்ததற்ற உணவுப்பொருட்கள் பிரான்ஸில் விளம்பரம் செய்யப்படுவதாகத் தகவல்
பிரான்சில் இன்று குழந்தைகள் உண்ணும் உணவில் பத்தில் ஒன்பது உணவு வகைகள் அவர்களின் உடல்பருமன் உட்பட்ட பல்வேறு பட்ட நோய்களுக்கு காரணமாக அமைகிறது என (organisation non-gouvernementale) பிரான்ஸ் அரசசார்பற்ற நிறுவனங்கள் அரசுக்கு சுட்டிக்காட்டியுள்ளது.
உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்திருக்கும் அளவை விட அதிக கொழுப்பு, அளவுக்கு அதிகமான இனிப்பு, உப்பு என்பன இன்று குழந்தைகள் உண்ணும் உணவில் இருப்பதாக தெரிவித்திருக்கும் ONG நிறுவனம் ஒருசில நிறுவனங்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளது.
Coca-Cola, Ferrero, Kellog's மற்றும் Nestlé போன்ற உணவு நிறுவனங்கள் குழந்தைகளை கவரும் வகையில் விளம்பரங்களை செய்து அவர்களை தங்கள் உணவு வகைகளுமக்கு அடிமையாக்கி உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
அரசு, ஒன்றில் அவர்களின் விளம்பரங்களை மட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் குறித்த நிறுவனங்கள், உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கு உட்பட்டு உணவுப் பொருட்களை தாயாரிக்க நிர்பந்திக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் உணவு பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் குழந்தைகளை கவரும் வகையில் விளம்பரங்கள் செய்யும் அளவுக்கு; அரசு "5 fruits et légumes par jour" என்னும் விளம்பரத்தைக் கூட செய்வதில்லை, அது வெறும் வார்த்தைகளாகவே உள்ளது எனவும். ONG தெரிவித்துள்ளது.