தற்பாதுகாப்பிற்கு ஆற்றில் குதித்த பிரான்ஸ் நபரொருவர் உயிரிழப்பு

#France #Lanka4 #லங்கா4 #River #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
தற்பாதுகாப்பிற்கு ஆற்றில் குதித்த பிரான்ஸ் நபரொருவர் உயிரிழப்பு

மேம்பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார். Mantes-la-Jolie (Yvelines) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

 செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 44 வயதுடைய ஒருவர் அன்றைய இரவு, Quai des Cordeliers அருகே உள்ள வீதி ஒன்றில் நடந்து செனருகொண்டிருந்த போது இருவர் அவர்மீது தாக்குதல் நடத்த முற்பட்டனர்.

 அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய குறித்த நபர், அங்குள்ள மேம்பாலம் வழியாக தப்பி ஓடியுள்ளார். அப்போது தாக்குதலாளிகள் அவரை நெருங்கிவிட, மேம்பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்துள்ளார்.

 கிட்டத்தட்ட 20 மீற்றர் உயரத்தில் இருந்து ஆற்றில் விழுந்த குறித்த நபர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!