கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு கனமழை என எச்சரிக்கை

#India #Rain #HeavyRain #2023 #Tamilnews #Kerala
Mani
1 year ago
கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு கனமழை என எச்சரிக்கை

கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் பத்தினம்திட்டா மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 11 மாவட்டங்களில் 6 முதல் 11 செ.மீ வரை மழை பெய்துள்ளது. இதனால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.