இந்தியாவின் சாதனையை முறியடித்த தென் ஆப்பிரிக்கா

#Australia #Cricket #sports #SouthAfrica #WorldRecord
Prasu
2 years ago
இந்தியாவின் சாதனையை முறியடித்த தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.

அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 416 ரன்கள் குவித்தது. ஹென்ரிச் கிளாசென் 83 பந்துகளில் 13 பவுண்டரி, 13 சிக்சர் உள்பட 174 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 

டேவிட் மில்லர் 45 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்சர் உள்பட 82 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வான்டெர் டுசன் அரை சதமடித்து 62 ரன்னில் அவுட்டானார். 5-வது விக்கெட்டுக்கு கிளாசன், மில்லர் ஜோடி 94 பந்துகளில் 222 ரன்கள் குவித்து அசத்தியது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணி ஒருநாள் போட்டிகளில் 7-வது முறையாக 400 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

 மேலும், அதிக முறை 400 ரன்கள் எடுத்த பட்டியலில் இந்தியாவின் சாதனையை தென் ஆப்பிரிக்கா முறியடித்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4