விஜய்யின் ‘லியோ’ தெலுங்கு போஸ்டர் வெளியீடு

#India #Cinema #Actor #TamilCinema #Director #2023 #Vijay #Tamilnews
Mani
2 years ago
விஜய்யின் ‘லியோ’ தெலுங்கு போஸ்டர் வெளியீடு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு போஸ்டர் விருந்து தரப்போவதாக 'லியோ' படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இன்று 'லியோ' படத்தின் தெலுங்கு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4