கனடாவில் தமிழ் நகைக்கடைக்காரர் செய்த மோசடி!
#Canada
#Lanka4
#லங்கா4
#மோசடி
#தங்கம்
#Gold
#Canada Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago

கனடாவில் அண்மையில் நகைக்கடை வியாபாரி ஒருவர் சில வியாபாரிகளுக்கு பல அடுக்கு பவுண் முலாம் பூசப்பட்ட நகைகளை விநியோகம் செய்துள்ளார்.
இதன்படி, வியாபாரிகள் சிலர் அவரை நம்பி அதை வாங்கி உள்ளனர், இதேவேளை அந்த நகை வியாபாரியின் நம்பிக்கை இன்மையை அறிந்து சில வியாபாரிகள் பொருட்களை வெட்டி சோதித்து பார்த்துள்ளனர்.
குறித்த பொருட்கள் நுண்கருவியால் கூட காண்பிக்காதபடி பல அடுக்கு முலாம் பூசப்பட்டு இருந்துள்ளது. இதனை அறிந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர் அவர் நகை வாங்கிய கடைக்கு சென்று நகைக்கடை வியாபாரியிடம் சண்டையிட்டுள்ளார்.
இச்சம்பவத்தினால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியுள்ளது.



