நடைபாதையில் உந்துருளியில் பயணம் செய்த பிரெஞ் நபர் கைது

#Arrest #Police #France #கைது #பொலிஸ் #லங்கா4 #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
நடைபாதையில் உந்துருளியில் பயணம் செய்த பிரெஞ் நபர் கைது

பாதசாரிகளுக்கான நடைபாதையில் பயணித்த உந்துருளி ஒன்றினை தடுத்து நிறுத்த முற்பட்ட இரு காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.

 Agen (Lot-et-Garonne) நகரில் இச்சம்பவம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. 21 வயதுடைய இளைஞன் ஒருவன் மாலை 4 மணி அளவில் அங்குள்ள நடை பாதை ஒன்றில் உந்துருளி (moto) அதிவேகமாக பயணித்துள்ளான். 

காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அழைக்கப்பட்டனர். குறித்த இளைஞனை தடுத்து நிறுத்த முற்பட்டும் அவன் உந்துருளியை நிறுத்தாமல் தொடர்ந்து பயணித்துள்ளான். 

 அதையடுத்து இளைஞனை தடுத்து நிறுத்தும் நோக்கில் அவன் மீது பாய்ந்து மடக்கிப் பிடித்தனர். இச்சம்பவத்தில் இரு காவல்துறையினர் காயமடைந்தனர். உந்துருளி காவல்துறை வீரர் ஒருவரை தூக்கி வீசியுள்ளது.

 இரண்டாவது அதிகாரிக்கு இலேசான காயங்களும் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உந்துருளியை ஓட்டிச் சென்ற இளைஞன் கைது செய்யப்பட்டான்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!