மாத்தறை பாடசாலை ஒன்றில் ஆயுதக் கிடங்கு

#SriLanka #Police #Investigation #Weapons
Prathees
2 years ago
மாத்தறை பாடசாலை ஒன்றில் ஆயுதக் கிடங்கு

பாடசாலை ஒன்றில் கட்டப்பட்டுள்ள அறையின் மேற்கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 மாத்தறை, மத்தவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் இருந்து இந்த வெடிபொருட்கள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 மேலும் குறித்த அறை பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. T56 தோட்டாக்கள்-20, மிமீ 3.2 தோட்டாக்கள்-24 , மி.மீ. 9 தோட்டாக்கள்-107 மற்றும் கல் வெட்டு வகை துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

 மேலும், தொடர்ந்து தேடுதலின் போது, ​​டிஎன்டி என சந்தேகிக்கப்படும் 194 கிராம் வெடிபொருட்கள் மற்றும் சில சேவை நூல்களும் அங்கு கண்டெடுக்கப்பட்டன.

 சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4