அவுஸ்திரேலியா செல்லும் கனவில் 75 லட்சம் ரூபாவை இழந்த ஆசிரியர்!

#SriLanka #Sri Lanka President #Australia #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
அவுஸ்திரேலியா செல்லும் கனவில்  75 லட்சம் ரூபாவை இழந்த ஆசிரியர்!

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காக பணம் செலுத்தி ஏமாற்றமடைந்துள்ளார்.

 ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் விளம்பரங்கள் மூலமாக அவுஸ்திரேலியா செல்வதற்காக கொழும்பில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அறிமுகமாகி கட்டம் கட்டங்களாக 75 லட்சம் ரூபாவை வங்கியில் வைப்பிலிட்டுள்ளார்.

 வங்கியில் பணம் வைப்பிலிட்டு நீண்ட காலங்களாக ஏமாற்றமடைந்ததால் யாழ்.மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்தார்.

 அதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த யாழ்.மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி குணறோயன் கீழ் இயங்கும் சிசிர குழுவினர் கொழும்பினைச் சேர்ந்த சந்தேகநபரை கைது செய்து இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது சந்தேநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

 இந்தச் சந்தேகநபரால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4