விருந்து நிகழ்வில் எலியை உயிருடன் விழுங்கிய பிரெஞ் இளைஞர்

#France #Lanka4 #இளைஞன் #லங்கா4 #Youngster #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
விருந்து நிகழ்வில் எலியை உயிருடன் விழுங்கிய பிரெஞ் இளைஞர்

இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடனான விருந்து நிகழ்வொன்றின் போது எலி ஒன்றை உயிருடன் விழுங்கியுள்ளார். 

இச்செயலுக்கு மிருகவதைக்கு எதிரான அமைப்பு ஒன்று வழக்கு பதிவு செய்துள்ளது.

 இச்சம்பவம் Thiers (Marseille) நகரில் இடம்பெற்றுள்ளது. இளைஞர் ஒருவர் சிறிய எலி ஒன்றை உயிருடன் பிடித்து, பின்னர் அதனை தனது வாய்க்குள் கொண்டு சென்று அதனை உயிருடன் சாப்பிட்டுள்ளார். 

அதனை காணொளியாக பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். இணையவாசிகளை அதிர்ச்சியடைய வைத்த இந்த காணொளி, மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

 அதேவேளை, La Fondation 30 Millions எனும் மிருகவதைக்கு எதிரான அமைப்பு மேற்படி சம்பவத்துக்கு கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், குறித்த இளைஞன் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!