கனேடிய அதிக வயதான மூதாட்டியின் வாழ்வு ரகசியம்

#Canada #Women #Elder #Lanka4 #வயது #லங்கா4 #முதியோர் #Canada Tamil News #Tamil News
கனேடிய அதிக வயதான மூதாட்டியின் வாழ்வு ரகசியம்

கனடாவின் நோர்த் யோர்க் பிராந்தியத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 112ம் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

 ஹெலென் மெக்கினன் ஹோலன் என்ற மூதாட்டியே இவ்வாறு தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

 நன்றாக சுவாசிக்க வேண்டும் எனவும், துடிப்புடன் இருக்க வேண்டுமெனவும் அவர் தனது நீண்ட ஆயுளின் இரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். நீண்ட காலம் உயிர் வாழ்வதற்கு ஓரளவு அதிர்ஸ்டமும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 1911ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் திகதி பிறந்த ஹோலன் தனது வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். நிறுவனமொன்றில் கணக்குப் பதிவாளராக கடமையாற்றிய ஹோலன் 1976ம் ஆண்டில் ஓய்வு பெற்றுக்கொண்டுள்ளார்.

 தமது தாயும் தந்தையும் கல்வியின் முக்கியத்துவத்தை தமக்கு அடிக்கடி வலியுறுத்தியதாகவும் தாமும் அதனையே வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!