கனடாவிற்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கும் உக்ரைன் ஜனாதிபதி
#Canada
#Ukraine
#Lanka4
#President
#லங்கா4
#ஜனாதிபதி
#உக்ரைன்
#Visit
#Canada Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
எதிர்வரும் வியாழக்கிழமை அவர் இவ்வாறு கனடா விஜயம் செய்ய உள்ளார். ஸெலென்ஸ்கீ நாடாளுமன்றில் உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளார். இந்த நிலையில் அவர் கனடாவிற்கும் விஜயம் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்ய படையெடுப்பினை எதிர்த்து உக்ரைன் முன்னெடுத்து வரும் போருக்கு கனடா உதவிகளை வழங்கி வருகின்றது.
பல மில்லியன் டொலர் பெறுமதியான உதவிகளை கனடா, உக்ரைனுக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



