அவசர காலத்திற்காக பிரான்ஸில் மருந்துவகைகளை சில்லறையாகவும் வாங்க அரசு ஆலோசனை

#France #government #Lanka4 #மருந்து #Medicine #லங்கா4 #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
Mugunthan Mugunthan
11 months ago
அவசர காலத்திற்காக பிரான்ஸில் மருந்துவகைகளை சில்லறையாகவும் வாங்க அரசு ஆலோசனை

மருந்து வகைகளை உற்பத்தி செய்வதில் பிரான்ஸ் மருந்து உற்பத்தி ஆய்வகங்கள் மிகப் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

குளிர்காலம் நெருங்கிவரும் வேளையில் பல நோய்கள் மனிதர்களைத் தாக்கும் சூழலும் நெருங்கி வருகிறது. இந்த நிலைமையை சமாளிக்க அரசு புதிய ஆலோசனையை மருந்தகங்களுக்கு வழங்கியுள்ளது.

 நுண்ணுயிர் கிருமிகளை எதிர்க்கும் (antibiotiques) மருந்துகள் போன்ற சில மருந்து வகைகளை முழுப் பெட்டியாக நோயாளர்களுக்கு விற்பதற்கு பதிலாக, மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரைகளை எண்ணி சில்லறையாக விற்பனை செய்யும்படி, தற்காலிகமாக அவசரகால ஆலோசனையாக அரசு இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது.

 கூடுதலாக நோயாளர்கள் வாங்கிச் செல்லும் மருந்து வகைகளை பாவித்து விட்டு மீதியுள்ள மாத்திரைகளை தூக்கி வீசுகிறார்கள், இல்லையேல் அலமாரிகளில் அடுக்கி வைக்கிறார்கள். 

மருந்து தட்டுப்பாடு நிலவும் இன்றைய காலகட்டத்தில் மாத்திரைகள் வீணாக்கப்படுவதை தவிர்க்கவே, குறித்த ஆலோசனையை தாம் மருந்தகங்களுக்கு வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 அதேவேளை பல்கலைக்கழக மருத்துவ மனைகள், தகுதிவாய்ந்த மருந்தகங்கள் குறித்த சில மாத்திரைகளைத் தாங்களே தயாரிக்க தாம் அனுமதி அளித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.