நாடு முழுவதிலும் சுகாதார தொழிற்சங்கங்கள் போராட்டம்!

#SriLanka #Sri Lanka President #Health #Protest #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
1 year ago
நாடு முழுவதிலும் சுகாதார தொழிற்சங்கங்கள் போராட்டம்!

நாட்டில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடு உட்பட தமது துறையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு சுகாதார தொழிற்சங்கங்கள் உட்பட பல சிவில் அமைப்புக்கள் இன்று (22) வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.

 அதன்படி மதிய உணவு நேரத்தில் இந்த போராட்டங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 எனினும் நோயாளிகளின் சிகிச்சைக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்தப் போராட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 இது தொடர்பில் கருத்து தெரிவித்த அகில இலங்கை மருத்துவ மற்றும் சுகாதார தொழிற்சங்க சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் டொக்டர் மதுர சேனவிரத்ன, இத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இந்த போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!