உலகக் கிண்ணத்திற்கான ரக்பி போட்டியில் பிரான்ஸ் வரலாறு காணாத வெற்றி
ரக்பி உலகக்கிண்ணம் (Coupe du monde de rugby) போட்டிகளில் 'குழு A' பிரிவு போட்டியில் பிரான்ஸ் வரலாறுகாணாத வெற்றி ஒன்றை பதிவு செய்துள்ளது.
பிரான்ஸ்-நபீபியா அணிகளுக்கு இடையே இடையே இடம்பெற்ற இந்த போட்டியில் 96-0 எனும் கணக்கில் பிரான்ஸ் அபார வெற்றியினை பெற்றுள்ளது.
உலகக்கிண்ண போட்டி ஒன்றில் மேற்படி வெற்றியானது இதுவரை இல்லாத ஒன்றாகும். கடந்த வாரம் இடம்பெற்ற உருகுவே அணியுடனான போட்டியில் பிரான்ஸ் வெற்றியை தவறவிட்டு ஏமாற்றத்தை தந்திருந்தாலும், இன்றைய போட்டியில் மிகப்பெரிய வெற்றி ஒன்றை ரசிகர்களுக்கு பரிசாத தந்துள்ளனர்.
உலகக்கிண்ண போட்டி ஒன்றில் பிரான்ஸ் அணி முன்னதாக பதிவு செய்த மிகப்பெரிய வெற்றியும் நபீபியா அணிக்கு எதிராகவே இடம்பெற்றிருந்தது. 2007 ஆம் ஆண்டு உலக்கிண்ண போட்டியில் 87-10 எனும் அபார வெற்றியினை Toulouse நகரில் வைத்து பதிவு செய்திருந்தது.
இந்நிலையில், இன்றைய வெற்றியும் வரலாறுகாணாத மிகப்பெரிய வெற்றியாக மாறியுள்ளது. அதைத் தொடர்ந்து வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதி இடம்பெற உள்ள போட்டியில் இத்தாலிக்கு எதிராக பிரான்ஸ் விளையாட உள்ளது.