உள்ளுராட்சி தேர்தல் வேட்பு மனுக்களை இரத்து செய்யும் தீர்மானம் உகந்ததல்ல - ரோஹன ஹெட்டியாராச்சி

#SriLanka #Election #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
உள்ளுராட்சி தேர்தல் வேட்பு மனுக்களை இரத்து செய்யும் தீர்மானம் உகந்ததல்ல - ரோஹன ஹெட்டியாராச்சி

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்களை இரத்து செய்ய உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில்  நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள வேளையில் இவ்வாறான தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்  ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 

தேர்தலுக்கு சுமார் 1000 இலட்சத்திற்கு மேல் வாக்குச் சீட்டு அச்சடிப்பதற்காக செலவிடப்பட்டுள்ளதாகவும்,  இந்த முடிவின் மூலம் இந்த நாடு இழந்த தொகை 10,000 லட்சமாக அதிகரித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

தற்போது இந்தத் தேர்தல் நடைபெறாவிட்டாலும், உள்ளாட்சி தேர்தலை ஒரு கட்டத்தில் நடத்த வேண்டும். இந்த திட்டமானது மக்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4