ஹரக்கட்டா மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளை அழைத்துச் செல்ல வந்த காரைக் கண்டுபிடித்த சிஐடியினர்: இருவர் கைது

#SriLanka #Arrest #Police #Investigation
Prathees
2 years ago
ஹரக்கட்டா மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளை அழைத்துச் செல்ல வந்த காரைக் கண்டுபிடித்த சிஐடியினர்: இருவர் கைது

குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து தப்பிச் செல்லும் திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் பாதாள உலகக் குழுத் தலைவன் ஹரக்கட்டாவை நாட்டை விட்டு நாடு கடத்துவதற்கான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட குழுவைச் சேர்ந்த ஒருவரையும், அவருக்கு ஆதரவான பொலிஸ் கான்ஸ்டபிளையும் கொழும்பு குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

 கொழும்பில் இருந்து மாத்தறைக்கு ஹரக்கட்டா மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளை அழைத்துச் செல்வதற்கு தயாராகி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தலைமையகத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் மாத்தறை, கேகனதுர பிரதேசத்தில் இருந்த போதே குற்றப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 இந்த கார் மாத்தறை, கேகனதுர பகுதியில் உள்ள கார் வாடகை நிறுவனத்தில் இருந்து பெறப்பட்டது என தெரியவந்துள்ளது.

 ஹரக்கட்டா மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் கான்ஸ்டபிளை நாட்டை விட்டு வெளியேறுவதற்காக அழைத்து வர வந்த நபர் கெஸ்பேவ பிரதேசத்தில் மறைந்திருந்த போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 ஹரக்கட்டாவின் வலுவான உறுப்பினரான இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர். கடந்த 10ஆம் திகதி மாலை குற்றப் புலனாய்வுத் தலைமையகத்திலிருந்து தப்பிச் செல்ல ஹரக்கட்டா திட்டமிட்டிருந்த நிலையில், பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் முறியடிக்கப்பட்டது.

 கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் நெவில் சில்வா, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தர்மகீர்த்தி, பொலிஸ் பரிசோதகர் ஜயதிலக உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4