நடுவானில் சென்று கொண்டிருந்த விமானத்தில் இருந்த 73 வயது பெண்.உயிரிழப்பு

#Death #Flight #Women #England #Heart Attack #MidAir
Prasu
1 year ago
நடுவானில் சென்று கொண்டிருந்த விமானத்தில் இருந்த 73 வயது பெண்.உயிரிழப்பு

பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த பெண்ணொருவர் தூங்கி கொண்டிருப்பதாக பலரும் நினைத்த நிலையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று நேற்று லண்டனில் இருந்து நைஸுக்கு கிளம்பி சென்றது. விமானம் தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் இறங்க தொடங்கினார்.

73 வயதான ஒரு பெண் பயணி மட்டும் இருக்கையில் கண் அயர்ந்திருந்தார். அவர் தூங்குவதாகவே அனைவரும் நினைத்தனர், ஆனால் அவர் எழாத நிலையில் அவசர மருத்துவ குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் வந்து பரிசோதித்து பார்த்த போது அப்பெண் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.

 நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இது தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!