பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் செயலை கண்டித்துள்ள பிரித்தானியர்கள்
#UnitedKingdom
#France
#President
#மக்கள்
#KingCharles
#லங்கா4
#ஜனாதிபதி
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago
மூன்று நாள் விஜயமாக பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி கமிலியா ஆகியொர் பிரான்சிற்கு வந்திருந்தனர்.
இதில் ஒரு அங்கமாக வெற்றி வளைவும் வீழ்ந்துபட்ட மாவீரர்களின் நினைவிடமுமான Arc de triomphe. இற்கு மன்னர் சார்ள்ஸ், அவர் மனைவி கமிலா, ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் மற்றும் அவர் மனைவி பிரிஜித் மக்ரோன் ஆகியோரும் சென்றிருந்தனர்.
அவ்வேளையில் பிரெஞ்சு முறையில் பிரிஜித் மக்ரோன் கமிலியாவின் கன்னத்தில் முத்தமிட்டுள்ளார். அதே நேரம் எமானுவல் மக்ரோன் சார்ள்சின் வலது கரத்தினை அழுத்தி நட்பைத் தெரிவித்துள்ளார்.
இவை இரண்டும் மாபெரும் குற்றமென பிரித்தானியர்கள் விமர்சனம் செய்துள்ளனர். X வலை ஊடகத்தில் (முன்னாள் டுவிட்டர்) பெரும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதனை மோசமான காரியமாக பிரித்தானிய ஊடகங்கள் ஊதிப்பெருக்க வைத்துள்ளன.