'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

#Cinema #Actor #TamilCinema
Mani
2 years ago
'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் விக்ரம் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தில் கதாநாயகியாக ரீத்து வர்மா நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

'துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த 2017-ல் தொடங்கி 2019-ல் முடிவடைந்து, 4 வருடங்களாக ரிலீசுக்காக காத்திருக்கிறது. ரிலீஸ் தேதியில் பல தாமதங்களுக்குப் பிறகு, தற்போது 'துருவ நட்சத்திரம்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

'துருவ நட்சத்திரம்' திரைப்படம் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. போஸ்டர் மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அறிவித்தபடி இந்த முறையாவது வெளியாகுமா என்று எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4