ஜெயம் ரவி நடித்துள்ள 'இறைவன்' திரைப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ்

#Cinema #Actor #TamilCinema #Tamilnews
Mani
2 years ago
ஜெயம் ரவி நடித்துள்ள 'இறைவன்' திரைப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ்

'வாமனன்', 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஹமத். இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இறைவன்'. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், ஹரி. கே.வேதாந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜே.வி.மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். சமீபத்தில் இந்த சைக்கோ த்ரில்லர் கதையின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

'இறைவன்' திரைப்படத்தில் ஏராளமான வன்முறை காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4