பிரான்ஸில் கொக்கைன் கடத்தலில் ஈடுபட்டிருந்த மூவர் கைது!

#Arrest #France #world_news #Lanka4 #sri lanka tamil news #Tamil News
Thamilini
2 years ago
பிரான்ஸில் கொக்கைன் கடத்தலில் ஈடுபட்டிருந்த மூவர் கைது!

பிரான்ஸில் கொக்கைன் கடத்தலில் ஈடுபட்டிருந்த பெண் உள்ளிட்ட மூவரை மார்செய் நகர பொலிஸார் கைது செய்துள்ளனர். 

 செப்டம்பர் 18 ஆம் திகதி இக்கைது சம்பவம் மார்செய் நகரின்  10 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றை  சோதனையிட்ட  பொலிஸார் 43 கிலோ கொக்கைன் போதைப்பொருளையும், 50,550 யூரோக்கள் ரொக்கப்பணத்தையும் கைப்பற்றியுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பில் 19 தொடக்கம் 25 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெண் ஒருவரும் உள்ளதாக அறிய முடிகிறது. 

 கைதான மூவரில் ஒருவர் போதைப்பொருள் கடத்தலில் காவல்துறையினரால் முன்னதாகவே கைது செய்யப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4