மலேசியாவின் சென்டுல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொலை

#SriLanka #Death #Police #Investigation #Malasia #Tamilnews #sri lanka tamil news
Kanimoli
2 years ago
மலேசியாவின் சென்டுல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொலை

மலேசியாவின் சென்டுல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 சென்டுல் பகுதியிலுள்ள இலங்கை தம்பதியருக்கு சொந்தமான வீடொன்றில் நேற்றிரவு (22) இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 இரண்டு இலங்கையர்கள் இந்த கொலைகளை செய்திருக்கலாம் என மலேசிய பொலிஸார் சந்தேகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கோலாலம்பூர் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

 சுமார் 02 நாட்களுக்கு முன்னர் குறித்த வீட்டுக்கு மேலும் இரு இலங்கையர்கள் வந்திருந்த நிலையில், அவர்கள் இந்தக் கொலைகளை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மலேசிய பொலிஸார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4