நிபா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து WHOவுடன் கலந்துரையாடல்!

#WHO #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Virus
Thamilini
2 years ago
நிபா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து WHOவுடன் கலந்துரையாடல்!


நிபா வைரஸிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்துடன்  கலந்துரையாடி வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (24.09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நிபா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் வைராலஜி தொடர்பான நிபுணர்கள் கலந்துரையாடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நிபா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் பதிவாகினால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4