அக்குரஸ்ஸ காலி பிரதான வீதியில் விபத்து : இளைஞர் பலி!

#SriLanka #Accident #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
அக்குரஸ்ஸ காலி பிரதான வீதியில் விபத்து : இளைஞர் பலி!

அக்குரஸ்ஸ காலி பிரதான வீதியில் பேருந்து ஒன்றுடன்  முச்சக்கர வண்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த விபத்து சம்பவம் அக்குரஸ்ஸ காலி பிரதான வீதியில் ஹேனகம தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் நேற்று (24.09) இடம்பெற்றுள்ளது. 

இதில்  தெலிஜ்ஜவில, மாரகொட பிரதேசத்தைச் சேர்ந்த பசன் மனுஷ கமகே என்ற 17 வயதுடைய இளைஞன்  உயிரிழந்துள்ளார்.  

அதேபோல் விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதியான சுல்தானகொட சாரகொட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் அக்குரஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்குரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4