கொழும்பு – கன்யா பகுதியில் விபத்து : 15 பேர் காயம்!

#SriLanka #Accident #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கொழும்பு – கன்யா பகுதியில் விபத்து : 15 பேர் காயம்!

கொழும்பு – கன்யா பிரதான வீதியின் வெவெல்தெனிய திட்டவேல்மங்கட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸுடன் மற்றுமொரு பஸ் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்து இன்று (25.09) அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்தில் காயமடைந்த 15 பேர் வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். 

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4