கனடாவில் தமிழ் இளைஞன் செய்த மோசமான செயல்

கனடாவின் பிரம்டனில் பொலிஸ் உத்தியோகத்தர் என்ற போர்வையில் நபர் ஒருவர் தகாத செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
13 வயதான சிறுமி ஒருவரை குறித்த நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். 33 வயதான அனுசன் ஜெயக்குமார் என்ற நபரே இவ்வாறு குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார் எனவும் இவர் தமிழராக இருக்கக் கூடும் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தன்னை ஓர் பொலிஸ் உத்தியோகத்தர் என அடையாளப்படுத்திக் கொண்டு குற்றச் செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சந்தேக நபரை பீல் பிராந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாரைப் போன்று தோன்றியமை மற்றும் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நபர் மேலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.



