கல்கிசையில் பொலிஸாரை தாக்கிய 06 பேர் கைது!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கல்கிசையில் பொலிஸாரை தாக்கிய 06 பேர் கைது!

கல்கிசை கடற்கரையில் பொலிஸ் அதிகாரிகள் குழுவை தாக்கியதாக கூறப்படும் 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

16-30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

களுபோவில கடற்கரை பகுதியின் ஆபத்தான பகுதியில் சிலர் மதுபோதையில் நீராடி வருவதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த முறைப்பாட்டிற்கு அமைய அவ்விடத்திற்கு சென்ற பொலிஸார் அங்கு நீராடியவர்களை எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, குறித்த குழுவினர் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட நிலையில், அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலைமையை கட்டுப்படுத்த முயன்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது சந்தேகநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான பொலிஸார் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4