நுவரெலியாவில் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்!

#SriLanka #Protest #NuwaraEliya #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நுவரெலியாவில் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்!

நுவரெலியாவில் தபால் நிலைய ஊழியர்கள் இன்று (25.09)  மதியம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். 

பணி நியமனம்,  பதவி உயர்வு உள்ளிட்ட நிர்வாக பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண தபால் வருவாயை அதிகரிக்கும் சட்ட மேம்பாட்டு முன்மொழிவுகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அவர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர். 

அத்துடன்  ஊழியர் உரிமைகளை பறிக்கும் அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியதோடு,  தபால் ஊழியர்களுக்கு மாதாந்தம் 20000 ரூபாய் வாழ்வாதார கொடுப்பனவாகவழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையில் பதாதைகளை ஏந்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4