சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்தித்த சஜித் பிரேமதாச!

#SriLanka #Sri Lanka President #Sajith Premadasa #IMF #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
1 year ago
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்தித்த சஜித் பிரேமதாச!

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதிகளின் கீழ் மேற்கொள்ளப்படும் மீளாய்வு கலந்துரையாடலில் முதலாவது மீளாய்வின் இறுதி கலந்துரையாடலின் நிமித்தம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (25.09) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

 இந்நாட்டின் பல்வேறு பொருளாதார,சமூக,அரசியல் விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் இங்கு நீண்ட கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போதைய அரசாங்கம் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. 

குறிப்பாக அரசாங்கம் உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் உழைக்கும் மக்களின் ஊழியர் சேமலாப நிதிய மிகுதியில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருகை தந்திருந்த பிரதிநிதிகளிடம் தெரியப்படுத்தினார்.

 அவ்வாறே, ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடன், எட்டப்பட்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து மக்களுக்கு சாதகமான உடன்பாட்டை மேற்கொண்டு அதன் மூலம் நாட்டை கட்டியெழுப்புவதற்கான மூலோபாயங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

 இச்சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி Mr.Peter Breuer (Senior. Mission Chief),Ms.Katya Svirydzenka (Dep. Mission Chief),Dr.Sarwat Jahan (IMF Resident Representative), Ms.Manavee Abeyawickrama – (Local Economist),Lan Huong Vu (Communications Dept.) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். அவ்வாறே,பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலாநிதி ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசிம்,பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், வேலுகுமார் மற்றும் ஹர்ஷன ராஜகருணா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!