ஆசிய விளையாட்டு: ஆடவர் துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கம்
#sports
#2023
#Import
#Breakingnews
#Boat
#Sports News
#AsiaCup
Mani
1 year ago

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 2-வது நாளான நேற்று இந்தியா 5 பதக்கங்களை அறுவடை செய்தது. இந்தியாவுக்கு முதலாவது பதக்கத்தை துப்பாக்கி சுடுதல் வீராங்கனைகள் 'சுட்டு' தந்தனர்.
இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று இந்தியா பதக்க சேகரிப்பை தொடங்கியுள்ளது. இன்று தங்கப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து, துடுப்பு படகு போட்டியில் அடுத்தடுத்து இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. ஆடவருக்கான 4 பேர் கொண்ட படகுப்போட்டியில் இந்தியா 6:08.61 நேரதில் இலக்கை எட்டி இந்தியா வெண்கலம் பதக்கத்தை கைப்பற்றியது.



