30 கோடி மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற கென்ய பிரஜை கைது

#SriLanka #Arrest #Airport #drugs
Prathees
2 years ago
30 கோடி மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற கென்ய பிரஜை கைது

எத்தியோப்பியாவில் இருந்து 30 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வந்த கென்ய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் வழங்கப்பட்டது.

 26 வயதான கென்ய கார் வர்த்தகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

 எத்தியோப்பியாவிலிருந்து கத்தாரின் தோஹாவுக்கு வந்த அவர் அங்கிருந்து கத்தார் ஏர்வேஸ் விமானம் கேஆர்-654 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

 அவரது கைப் பையில் பிஸ்கட்டுகள் அடங்கிய 03 டின்களில் 04 கிலோ எடையுள்ள 180 கொக்கெய்ன் கேப்சூல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 குறித்த சந்தேகநபர் விமான நிலையத்திலிருந்து "பசுமை பாதை" வழியாக செல்லவிருந்த போது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் மற்றும் கொக்கேய்ன் போதைப்பொருள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4