ஷாப்டரின் விசாரணைகள் முடிந்துவிட்டன

#SriLanka #Court Order #Investigation
Prathees
2 years ago
ஷாப்டரின் விசாரணைகள் முடிந்துவிட்டன

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய திரு.தினேஷ் ஷாப்டரின் சடலத்தை தினேஷ் ஷாப்டரின் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ரஜீந்திர ஜயசூரிய இன்று (25) உத்தரவிட்டுள்ளார்.

தினேஷ் ஷாப்டரின் சகோதரர் ரமேஷ் ஷாப்டர் மற்றும் இறந்தவரின் மைத்துனர் ஜேம்ஸ் மேத்யூ ஆகியோரை விடுவிக்க மரணத்திற்கான காரணத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

2022 டிசம்பர் மாதம் 15ஆம் திகதி தனது மனைவியுடன் பிரிட்டன் செல்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் கொழும்பு, பொரளை மயானத்துக்கருகில் காருக்குள் குற்றுயிரும் குலையுயிருமாக தினேஷ் ஷாப்டர் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

 எனினும் அன்றிரவே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகள் இது ஒரு கொலையெனக் கூற, திடீரென தற்கொலையாக மாறி சமூகத்தில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. எனினும் தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலைதான் என்பதை அவருடைய குடும்பத்தினர் ஏற்க தயாராகவில்லை. இம்மரணம் திட்டமிடப்பட்ட மனிதப் படுகொலையாகவே அவர்களால் பார்க்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4