மன்னாரில் தியாக தீபம் திலீபனுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி!
தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தமிழர் தாயகப் பகுதிகள் மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மன்னாரில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் உறுப்பினர்கள் ,சமூக செயற்பாட்டாளர்கள் ,தேசிய உணர்வாளர்கள்,நகரசபை,பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் இணைந்து மலர் அஞ்சலி செலுத்தினர்.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் நானாட்டான் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் பரஞ்சோதி ,மன்னார் நகரசபையின் முன்னாள் உப தவிசாளர் ஜான்சன் உட்பட பொதுமக்கள் பலர் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டு தியாக தீபம் திலீபனுக்கு சுடர் ஏற்றி , மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.