தனக்கு மதிப்பளிக்காததால் புதிய பொலிஸ் அதிகாரியை தாக்கிய மேல் அதிகாரி

#SriLanka #Police #Hospital #Attack #officer
Prasu
2 years ago
தனக்கு மதிப்பளிக்காததால் புதிய பொலிஸ் அதிகாரியை தாக்கிய மேல் அதிகாரி

தனக்கு சல்யூட் அடிக்கவில்லை எனக் கூறி, புதிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் காதில் தாக்கியதாகக் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

இந்தச் சம்பவம் மேல் மாகாண வடக்கு பிரிவுக்கு உட்பட்ட பொலிஸ் நிலையம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட புதிய பொலிஸ் கான்ஸ்டபிள் தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

 புதிய பொலிஸ் கான்ஸ்டபிள் வங்கி ஒன்றின் முன்பாக கடமையில் ஈடுபட்டிருந்ததாகவும் சீருடையில் வந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு குறித்த கான்ஸ்டபிள் சல்யூட் அடிக்கவில்லை என்பதற்காக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4